நாயகன் கமல்ஹாசன் இயக்கி, நடிக்கும் விஸ்வரூபம் படத்தின் 2ம் பாகத்திற்கு மூ என்ற தலைப்பினை வைத்துள்ளார்.
ஏற்கனவே தொலைக்காட்சி பேட்டியொன்றில் ‘மூ’ படத்தின் தலைப்பை விரைவில் பதிவு செய்வேன் என்றார். ‘மூ’ என்பது மூன்று பேரை குறிக்கும் சொல் என்றும் கூறினார்.
'தசாவதாரம்' படத்தில் கமல் பத்து வேடங்களில் நடித்தார். ‘மூ’ படத்தில் மூன்று வேடங்களையும் வித்தியாசப்படுத்தி காட்டப்போகிறாராம்.
‘விஸ்வரூபம்’ படப்பிடிப்பு நடந்தபோதே ‘மூ’ படத்துக்கான சில காட்சிகளும் எடுக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
தீவிரவாதிகளைப் பற்றிய கதையான மூ படத்தின் மீதமுள்ள காட்சிகள் அமெரிக்காவில் படமாக்கவுள்ளனர்.
தீவிரவாதி முல்லா உமர் அமெரிக்காவில் இருந்து தப்புவதுபோல் ‘விஸ்வரூபம்’ படத்தை கமல் முடித்துள்ளார்.
இரண்டாம் பகுதியில் முல்லா உமர் இந்தியாவில் நாசவேலைகளில் ஈடுபட திட்டமிடுவது போன்றும் அதனை கமல் முறியடிப்பது போன்றும் திரைக்கதை உருவாகியுள்ளது.
இந்த படத்தை ஆங்கிலத்திலும் வெளியிட முடிவெடுத்துள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக