சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே அண்ணியுடன் கூடா நட்பு கொண்டிருந்ததை தட்டிக் கேட்டுக் கண்டித்த தந்தையை கட்டையால் அடித்துக் கொன்றார் மகன். இதையடுத்து மகனையும், அவரது அண்ணியையும் போலீஸார் கைது செய்தனர்.
மேச்சேரி அருகே உள்ளது புக்கம்பட்டிவேலன் வளவு கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த கோவிந்தராஜுக்கு சக்திவேல், ரங்கநாதன் என இரு மகன்கள் உள்ளனர். மேலும் இரு மகள்களும் உள்ளனர். இவர்களில் ரங்கநாதனைத் தவிர அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
சக்திவேல் தனது மனைவி ரேவதியுடன் கருத்து வேறுபாடு கொண்டு திருப்பத்தூர் போய் வசித்து வருகிறார். இந்த நிலையில் ரேவதிக்கும், ரங்கநாதனுக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டு விட்டது. இருவரும் யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள் உறவில் ஈடுபட்டு வந்தனர். ஆனால்இது கோவிந்தராஜுக்குத் தெரிய வரவே அவர் அதிர்ச்சி அடைந்தார்.
மகனையும், மருமகளையும் கூப்பிட்டுக் கண்டித்தார். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று இருவரும் மறுத்துள்ளனர். ஆனால் 2 நாட்களுக்கு முன்பு ரேவதியும், ரங்கநாதனும் தனிமையில் உல்லாசமாக இருந்ததைப் பார்த்து விட்டார் கோவிந்தராஜ்.இதனால் கடும் கோபமடைந்தார். மகனையும், மருமகளையும் தாக்க முயன்றார்.
பதிலுக்கு அவர்களும் தாக்க முயன்றனர். அக்கம் பக்கத்தினர் கூடி விட்டனர். அனைவரும் சேர்ந்து சண்டையை விலக்கி விட்டனர். இந்த நிலையில் சனிக்கிழமையன்று இரவு கோவிந்தராஜ் வெளியே போய் விட்டு வீடு திரும்பியபோதும், ரங்கநாதனும், ரேவதியும் தனிமையில் இருந்ததனர். இதைப் பார்த்து கோபாவேசமடைந்தார் கோவிந்தராஜ். தொடர்ந்து தனது தந்தை தனது இன்ப வாழ்க்கைக்கு இடையூறாக இருப்பதை அறிந்து கோபமடைந்த ரங்கநாதன், தந்தையைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்தார்.
இதையடுத்து ரேவதி, கோவிந்தராஜின் கைகளை பிடித்துக் கொள்ள, கட்டையை எடுத்து தனது தந்தையை பலமாக தாக்கியுள்ளார் ரங்கநாதன். இதில் கோவிந்தராஜ், பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் இருவரும் வீட்டை விட்டு ஓடி விட்டனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் வழக்குப் பதிவு செய்து கோவிந்தராஜ் உடலை மீட்டனர். ரேவதி, ரங்கநாதனையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக