மலேசியாவில் கார் ஓட்டி சென்ற ஆசிரியை தவளையை பார்த்து பயந்து தடுமாறியதால் விபத்தில் பலியானார்.
மலேசியாவில் ஆசிரியையாக இருந்த மோயி இன் (வயது 39), தன் குழந்தைகளுடன் பள்ளியில் இருந்து புறப்பட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.
கார் வேகமாக சென்று கொண்டிருந்த போது காருக்குள் தவளை துள்ளி குதிப்பதை பார்த்து அவர், பீதியடைந்ததால் ஓடிக்கொண்டிருந்த கார், நிலை தடுமாறி சாலையோர மரத்தின் மீது வேகமாக மோதியது.
இந்த விபத்தில் மோயி இன் பலியானதுடன், எட்டு வயது மகனுக்கு கால் முறிந்தது. மேலும், ஒன்பது வயது மகளுக்கு தலையில் அடிப்பட்டு சுயநினைவில்லாமல் இருக்கிறார்.
0 கருத்து:
கருத்துரையிடுக