புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தமிழ் சினிமாவில் "காதல் ஜோதி" உட்பட 75 படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்த பழம்பெரும் நடிகை எஸ்.பானுமதி மாரடைப்பால் காலமானார்.

67 வயதான பானுமதி தில்லானாமோகனாம்பாள், காதல் மன்னன், வியட்நாம் வீடு உட்பட 75 படங்களில் நடித்தார்.

குணசித்திர வேடங்களையே பெரும்பாலும் ஏற்று நடித்த இவர், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த சில மாதங்களாக மஞ்சள் காமாலை நோய் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த பானுமதி மாரடைப்பால் இறந்தார்.

இவருக்கு லட்சுமி என்ற ஒரு மகள் மட்டும் இருக்கிறார். பானுமதியின் இறுதி சடங்குகள் இன்று காலை 11 மணிக்கு நடக்கிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top