கண் பார்வை இல்லாத மாணவன் ஒருவர் யாழ்ப்பாணத்தில் க. பொ. த உயர்தர பரீட்சையில் கலைப் பிரிவில் 3 ஏ சித்திகளை பெற்று அபரிமித சாதனை படைத்து உள்ளார்.
மட்டும் அன்றி வட மாகாணத்தில் நான்காவது இடத்தையும், தேசிய மட்டத்தில் 54 ஆவது இடத்தையும் அடைந்து உள்ளார் இச்சாதனை மாணவன்.
இவரின் பெயர் சொர்ணலிங்கம் தர்மதன். கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவரின் மகன். தெல்லிப்பழை யூனியன் கல்லூரியையில் கற்பவர். தமிழ், இந்து நாஅகரிகம், அரசியல் ஆகிய பாடங்களுக்கு தோற்றி ஏ சித்திகளை அடைந்து உள்ளார்.
இவர் 09 ஆவது வயதில் பார்வையை முற்றாக இழந்தார். இருப்பினும் பிரெயில் என்று சொல்லப்படுகின்ற புடையெழுத்து முறையில் கல்வியை வெற்றிகரமாக தொடர்ந்தார்.
இவரது வெற்றிக்கு பெற்றோர், ஆசிரியர்கள், சக மாணவர்கள் தந்த ஆக்கமும், ஊக்கமும்தான் உந்து சக்திகளாக அமைந்தன என்றார்.
இவரை வாழ்த்துகின்றமையில் தாய்நாடு பெருமை அடைகின்றது
0 கருத்து:
கருத்துரையிடுக