சில தினங்களுக்கு முன் ட்விட்டரில் தன் கருத்தை தெரிவித்திருந்த வரலட்சுமி, “விஸ்வரூபம் பிரச்சனையில் இங்கு என்ன நடக்கிறது என்றே எனக்கு தெரியவில்லை, நடப்பதையெல்லாம் பார்க்கும்போது எனக்கு மிகவும்
அதிர்ச்சியாக உள்ளது. மேலும் நடிகர் சங்கம் இந்த விஷயத்தில் இன்னும் ஏன் மெளனமாக உள்ளது? என்றும் நான் உங்களுக்கு ஆதராவாக இருப்பேன் கமல் சார்,” என்றெல்லாம் கருத்து கூறியிருந்தார்.
வரலட்சுமியின் அப்பா சரத்குமார்தான் நடிகர் சங்கத்தின் தலைவர் என்பதும், அவர் அ.தி.மு.க ஆதரவு எம்.எல்.ஏ. என்பதும் வரலட்சுமிக்கு தெரியாதா… போய் தன் அப்பாவிடம் கேட்க வேண்டிய கேள்வியை ட்விட்டரி்ல் கேட்டுக் கொண்டிக்கிறாரே என்று கமெண்ட்கள் பறந்தன கோலிவுட்டில்.
இதைத்தானே நம்ம விஷாலும் கேட்டார் .. அவரை துரத்தவும் ஏற்பாடுகள் முயற்சிகள் நடைபெறுகின்றன.. சரத் மகள் என்பதால் டிஸ்கவுன்ட் கொடுத்துவிட்டார்கள் போலும்..
0 கருத்து:
கருத்துரையிடுக