புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஆறு ஆண்டுகளாக வீட்டுக்குள் பூட்டி சிறை வைக்கப்பட்டிருந்த மகள்களை, தந்தையிடமிருந்து காவல்துறையினர் மீட்டனர்.


ஆந்திர மாநிலம், மேடக் மாவட்டம் ஹப்சிபூர் கிராமத்தை சேர்ந்த சீனிவாச ரெட்டி, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மனைவி லட்சுமியுடன் தகராறு செய்து அவரை தாய் வீட்டுக்கு அனுப்பி விட்டார்.

பின்னர், தனது இரு மகள்களான ஜோதி, சந்திரகலா ஆகியோரை வெளியே அனுப்ப பயந்த அவர், இருவரையும் வீட்டுக்குள் பூட்டினார். இது தொடர்பாக லட்சுமி தனது கணவரை தொலைபேசி மூலம் பலமுறை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, அவருடன் பேச மறுத்து விட்டார்.

இது குறித்து துப்பாக்கா காவல்நிலையத்தில் லட்சுமி நேற்று முன்தினம் புகார் செய்தார். அதில், என்னை 6 ஆண்டுகளுக்கு முன்பு அடித்து உதைத்து, தாய் வீட்டுக்கு அனுப்பிய கணவர், எனது 2 மகள்களையும் வெளியே அனுப்ப பயந்து வீட்டுக்குள்ளேயே சிறை வைத்திருக்கிறார். அவரிடம் இருந்து எனது மகள்களை மீட்டு தர வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, சீனிவாச ரெட்டி வீட்டுக்கு சென்ற பொலிசார், அங்கு சிறை வைக்கப்பட்டிருந்த 2 மகள்களையும் மீட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, இருவரும் சரியாக பேச முடியாமல் அவதிப்பட்டனர்.

அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தது தெரிய வந்தது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top