புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கனடாவில் தொலைந்து போனவர்களை கண்டுபிடிக்க காவல்துறை ஒரு புதிய இணையதளத்தை உருவாக்கியுள்ளது.
கனடாவின் காவல்துறை தொலைந்து போனவர்களைக் கண்டுபிடிக்கவும், அடையாளம்
தெரியாமல் சவக்கிடங்கில் கிடக்கும் பிணங்களை அடையாளம் தெரிந்துகொள்ளவும் புதிய இணையதளம் ஒன்றைத் தொடங்கியுள்ளது.

தொலைந்து போனவர்கள் மற்றும் அடையாளம் தெரியாத பிணங்களுக்காக, தேசிய மையம் canadas missing.ca என்ற இணையதளத்தைத் தொடங்கியுள்ளது.

காவல்துறை ஆணையர் பாப் பால்சன் (Bob Paulson )கூறுகையில், இந்த இணையதளம் சட்ட அமலாக்க அதிகாரி, மருத்துவப் பரிசோதகர், சவப்பரிசோதனையாளர் ஆகியோருக்குப் பேருதவியாக விளங்கும். குறிப்பாக இந்த இணையதளத்தின் உதவியுடன் அவர்கள் தங்களின் வழக்குகளை விரைந்து முடிக்க முடியும் என்று தெரிவித்தார்.

பாதுகாப்புத் துறையின் அமைச்சர் விக் டோவ்ஸ்(Vic Toews), இந்த இணையதளத்தைப் பார்க்கும் பொதுமக்கள் தங்களுக்குத் தெரிந்த தகவல்களைத் தெரிவித்தால் காவல்துறைக்கு அது பேருதவியாக இருக்கும் என்று கூறினார்.

மேலும் இந்த இணையதளம் இன்னும் முழுமையடையவில்லை தற்போது வெறும் 715 பேர் பற்றிய தகவல்கள் மட்டுமே உள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் கண்ணீர் நெடுஞ்சாலையில்(Highway of Tears) காணாமற்போன பல பெண்களின் பதிவுகளும் இந்த இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top