புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மகா பராக்கிரமபாகு மன்னன் காலத்தில் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க பொலன்னறுவை சிவன் ஆலயத்தின் சிவலிங்கம் பிரதிட்டை
செய்யப்பட்டிருந்த இடத்தில் உள்ள கல் சிலேட்டு அகற்றப்பட்டு புதையல் தோண்ட முட்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அங்கு மூன்று அடி குழி பறித்து இனந்தெரியாத சிலர் புதையல் அகழ்ந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலன்னறுவை பொலிஸ் நிலைய விசேட குழு இன்று காலை அந்த இடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

நேற்றிரவு இந்த புதையல் அகழ்வு இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

பொலன்னறுவை சிவன் கோயிலுக்கு அருகில் கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் புதையல் அகழ்வு இடம்பெற்றது.

வரலாற்று சிறப்பு மிக்க சிவன்கோயில் பகுதிக்கு இரவில் காவலாளி இல்லாததால் இவ்வாறு புதையல் அகழ்வு இடம்பெறுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பொலன்னறுவை தொல்பொருள் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து 500 மீற்றருக்கு உட்பட்ட தொலைவிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top