மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஐயங்கேணி பிரதேசத்தில் உள்ள வீட்டுக் கிணற்றிலிருந்து 3 வயது குழந்தையின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
ஐயன்கேணி ரெட்பானாபுரம் பகுதியிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பி.விதுஷன் என்ற குழந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர்.
வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தவறுதலாக கிணற்றுக்குள் விழுந்துள்ளது எனவும் கிணற்றிலிருந்து நீரை அள்ளி எடுப்பதற்குச் சென்றபோதே குழந்தையின் சடலம் வாளியில் சிக்கியதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்து:
கருத்துரையிடுக