புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


விஸ்வரூபம்' திரைப்படத்தில் இஸ்லாமியர்கள் எதிர்க்கும் 7 காட்சிகளை நீக்குவதாக அத்திரைப்படத்தை இயக்கி நடித்துள்ள உலக நாயகன் கமல்ஹாசன் இணக்கம் தெரிவித்ததை அடுத்து தமிழக அரசு, கமல் தரப்பு மற்றும் முஸ்லிம்
அமைப்புகளுக்கிடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சுமூகமாக நிறைவுக்கு வந்துள்ளது என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில்,இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெறுவதாக தெரிவித்த கமல்ஹாஸன், திரைப்படம் வெளியாகும் திகதியை இன்று இரவே அறிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று மாலை இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது, மேற்படி 7 இந்தக் காட்சிகள்இஸ்லாமியரை அவமதிப்பதாகவும், இஸ்லாம் மதத்துக்கு எதிரானதாகவும் உள்ளது என முஸ்லிம் தலைவர்கள் சொன்னதை கமல் ஏற்றுக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து திரைப்படத்தை வெளியிட இஸ்லாமிய அமைப்பினர் ஒருமனதாக சம்மதித்தனர். இந்த முடிவு ஏற்பட காரணமான தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கமல் நன்றி தெரிவித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top