புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


வடமராட்சியில் வட இந்து ஆரம்பப் பாட சாலை ஆசிரியை ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார்.


கல்வியியற் கல்லூரியில் கற்கையை முடித்து அண்மையிலேயே இவர் இந்தப் பாடசாலையில் ஆசிரியையாக சேர்ந் திருந்த நிலையில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் பருத்தித்துறை கலட்டியிலுள்ள தனது வீட்டிலுள்ளே தூக்கில் தொங்கிய
நிலையில் உயிரிழந்துள்ளார். திவாகர் திவ்யா (23 வயது) என்ற இவர் பாடசாலையை விட்டு வீட்டுக்கு வந்த போது வீட்டில் எவரும் இருக்கவில்லை.

இந்த நிலையில் வெளியே சென்றிருந்த பெற்றோர் திரும்பி வந்து பார்த்தபோது இவர் வீட்டினுள் தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையிலிருந்துள்ளார்.

உடனடியாக அயலவர்களின் உதவியுடன் அவரை மீட்டு மந்திகை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்ற போது அங்கு உயிரிழந்துள்ளார்.

இவரின் உயிரிழப்புக்கு காதல் பிரச்சனையே காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இவரது சடலம் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top