புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ரஷ்யாவில் உள்ள பிளாகோவேஷ்சென்ஸ்க் நீதிமன்றத்தில் யெவ்கெனி மக்னோ நீதிபதியாக பணியாற்றினார்.

கடந்த யூலை மாதம் இந்த நீதிமன்றத்தில் நடந்த பொருளாதார குற்றம் தொடர்பான வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்ட நபரின் சட்டத்தரனி காரசாரமாக வாதாடிக்கொண்டிருந்தார்.

எதிர்க்கட்சி சட்டத்தரனியின் வாதத்தை பதிவு செய்துக்கொள்ள வேண்டிய நீதிபதியோ, தனது இருக்கையில் சொகுசாக சாய்ந்தபடி குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருந்தார்.

இறுதியில் அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி சமீபத்தில் அந்த நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேற்கண்ட வழக்கை அந்த நீதிபதி எந்த லட்சணத்தில் விசாரித்தார் என்று அவர் குறட்டை விட்ட வீடியோ காட்சிகளுடன் ஒரு இணையதள பத்திரிகை விமர்சித்து இருந்தது.

இந்த வீடியோவை பார்த்த நீதிமன்ற ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், நீதிபதி யெவ்கெனி மக்னோவை ராஜினாமா செய்யும்படி அறிவுறுத்தினர்.

இதனையடுத்து, தலைமை நீதிபதியிடம் அவர் தனது ராஜினாமா கடிதத்தை நேற்று வழங்கினார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top