ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் வைகைப் புயல் வடிவேலு. அதுவும் வெறும் காமெடியனாக அல்ல… கதாநாயகனாக! 2010 தேர்தலில் திமுகவுக்காக புயலாய் சுற்றிச் சுழன்று பிரச்சாரம் செய்த வடிவேலு, ஆட்சி
மாறியதும் இருக்குமிடம் தெரியாத அளவு ஆகிப் போனார்.
இந்த இரண்டரை ஆண்டு காலத்தில் அவர் நடிப்பில் வெளியான படங்கள் மம்பட்டியான் மற்றும் மறுபடியும் ஒரு காதல் ஆகிய படங்கள்தான். ஆனால் இவற்றில் அவர் எப்போதோ நடித்து முடித்திருந்தார். ஜெயலலிதா முதல்வரான பிறகு, வடிவேலுவை எந்த நிறுவனமும் நடிக்க அழைக்கவில்லை. இயக்குநர்கள் கண்டுகொள்ளவே இல்லை. இடையில் அவ்வப்போது வடிவேலு இந்தப் படத்தில் நடிக்கிறார், அந்தப் படத்தில் நடிக்கிறார் என்றெல்லாம் செய்திகள் வரும். அவ்வளவுதான். ஆனால் வடிவேலு உண்மையிலேயே தனது அடுத்த என்ட்ரி அசத்தலாக இருக்க வேண்டும் என்பதற்காக சில வேலைகளைச் செய்து வந்தார்.
அதில் ஒன்று இம்சை அரசன் 23-ம் புலிகேசியின் இரண்டாம் பாகத்தில், சிம்பு தேவன் இயக்கத்தில் நடிப்பது. அதற்கான ஆரம்பப் பணிகள் முடிந்துவிட்டன. விரைவில் படப்பிடிப்பும் தொடங்கவிருக்கிறது. இன்னொரு பக்கம், ஏஜிஎஸ் தயாரிக்கும் படத்தில், யுவராஜ் இயக்கத்தில் ஹீரோவாக நடிப்பது. இந்தப் படம் இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. விரைவில் மற்ற விவரங்கள் வரும் என்று கூறப்பட்டுள்ளது. இவை தவிர, கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும் வடிவேலு நடிக்கப் போகிறார்.
0 கருத்து:
கருத்துரையிடுக