கொலிவுட்டில் அடுத்த சூப்பர்ஸ்டார் யார்? என்ற கேள்வியினை போர்ப்ஸ் என்ற பத்திரிகை இணையதளத்தில் எழுப்பியுள்ளது.
தற்போது 62 வயதாகும் ரஜினிகாந்த், சுமார் 24 வருடங்களுக்கு மேலாக சூப்பர்ஸ்டாராக இருந்து வருகிறார்.
ஆனால் சமீபகாலமாக இரண்டு வருடத்துக்கு ஒரு படம் என்று பட எண்ணிக்கையை குறைத்து வருகிறார்.
அதனால் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற தகுதி தமிழ் சினிமாவில் யாருக்கு இருக்கிறது? என்றொரு கேள்வியையும் முன் வைத்துள்ளது.
ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக தற்போது விஜய், அஜீத் இருவரும் தான் இருக்கிறார்கள். இவர்களில் அதிக ரசிகர்கள் யாருக்கு இருக்கிறார்கள்.
யாருக்கு ரசிகர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் அதிகமாக இருக்கிறது என்பதை கருத்தில் கொண்டு அவரை சூப்பர் ஸ்டார் என்று அழைப்பார்கள்.
விஜய், அஜீத்துக்கு அடுத்தப்படியாக சூர்யா, விக்ரம் ஆகியோரும் இந்தப்பட்டியலில் இருக்கின்றனர்.
ஏற்கனவே முன்பு ஒருமுறை அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பிரச்னை கொலிவுட்டில் ஏற்பட்டு பின்பு அடங்கிவிட்டது.
ஆனால் இப்போது போர்ப்ஸ் என்ற பத்திரிகை மறுபடியும் கொலிவுட்டில் அடுத்த சூப்பர்ஸ்டார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இருப்பினும் எந்த முன்னணி சினிமா ஜாம்பவான்களின் வாயிலிருந்து அந்த வார்த்தை முதலில் வெளிப்படுகிறதோ அந்த நடிகரே அடுத்த சூப்பர்ஸ்டார் என்கிற பெருமையை பெருவார்கள்.
அதற்கான சந்தர்ப்பத்தை அனைவருமே ஆவலுடன் எதிர்நோக்கத் தொடங்கியுள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக