திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் மோகன் (வயது 34) ஆட்டோ டிரைவரான இவர் பள்ளிக்குழந்தைகளை தினமும் ஆட்டோவில் ஏற்றி பள்ளிக்கு அழைத்து செல்வார். ராயப்பேட்டையில் வசித்து வரும் தொழில் அதிபர் ஒருவரின் மகளான 9
வயது சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் மோகன் பள்ளிக்கூடம் அருகில் வைத்து குழத்தைகளை ஆட்டோவில் ஏற்றியபோது சிறுமி சுதாவிடம் தகாதமுறையில் நடந்துள்ளார். செக்ஸ் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி தெரியவந்ததும் சிறுமியின் உறவினர்கள் ஆட்டோ டிரைவர் மோகனை பிடித்து ராயப்பேட்டை பொலிசில் ஒப்படைத்தனர்.
அதேநேரத்தில் சிறுமியின் பெற்றோர் தங்களது மகளின் நலன்கருதி புகார் கொடுக்க மறுத்துவிட்டனர். இதனால் சாதாரண சட்டப் பிரிவில் வழக்கு பதிவு செய்த பொலிசார் மோகனை கைது செய்தனர். சென்னையில் சமீப காலமாக சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
வடக்கு கடற்கரை பொலிஸ் நிலையம், தியாகராயநகர், அயனாவரம் ஆகிய பகுதிகளில் கடந்த சிலநாட்களுக்கு முன்னர் சிறுமிகளிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது செய்யபட்டது குறிப்பிடத்தக்கது. இதில் அயனாவரத்தில் மட்டும் சம்பந்தப்பட்ட பெற்றோர் புகார் செய்ய மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்போது பொலிசார் சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் சாதாரண சட்டபிரிவை பயன்படுத்தினர்.
0 கருத்து:
கருத்துரையிடுக