புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அமெரிக்க பெண் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.அவரது பெயர் ஷான்டா ரஷ். 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒருநாள் காலையில் அவர் விழித்தெழுந்தபோது அவருக்கு
மனசெல்லாம் ‘பிளாங்க்’ ஆக இருந்தது. தான் யார், தான் எங்கிருக்கிறோம், தன்னுடன் உள்ளவர்கள் யார் என்பது அவருக்கு நினைவில்லை. அத்தனை பேரும் அந்நியமாக தெரிந்துள்ளனர். அவருக்குப் பெரும் குழப்பமாகி விட்டது. அந்த நாளுக்கு முந்தைய 30 வருட வாழ்க்கையும், அதன் நிகழ்வுகளும் அவரை விட்டுப் போய் விட்டன. எல்லாமே துடைத்துப் போட்டது போல இருந்தது.

அவருக்கு வந்திருப்பது ‘போட் அம்னீஷியா’ என்ற ஞாபக மறதி நோயாகும். தனது குழந்தை யார், தனது கணவர் யார் என்பது கூட அவருக்கு நினைவில்லை.

மேலும் ஒருவருடன் எப்படிப் பேசுவது என்பது கூட அவருக்குத் தெரியவில்லை. எப்படிப் பேச வேண்டும், எப்படி பழக வேண்டும் என்பது கூட அவருக்குத் தெரியவில்லை. அந்த அளவுக்கு மோசமான நிலைக்கு மாறி விட்டார் ரஷ். அவருக்கு தற்போது இதுபோன்ற அடிப்படை விஷயங்களை அவருக்கு சொல்லிக் கொடுப்பது பேஸ்புக், டிவி, வீடியோ போன்றவைதான். தனது மகளையு்ம், கணவரையும் கூட அவரால் அடையாளம் காண முடியாமல் போனதுதான் சோகத்திலும் பெரிய சோகம். நீங்க யார், எனக்கு என்ன உறவு முறை வரும் என்று தனது கணவரிடம் கேட்டபோது அவர்துடித்துப் போய் விட்டாராம்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top