கணவர், அடிக்கடி பணம் கேட்டு துன்புறுத்தியதால், மனைவி, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பூர், கோவிந்தசாமி தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ், 30; தனியார் பாதுகாப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி ரேகா, 28. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அடிக்கடி பணம் கேட்டு, ரேகாவை, பிரகாஷ் அடித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரேகா, நேற்று காலை, 11:00 மணிக்கு, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். செம்பியம் போலீசார், ரேகாவின் உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்ட பிரகாஷிடம், விசாரணை நடக்கிறது.
இதேபோல், கொய்யா தோப்பு பகுதியைச் சேர்ந்த ஹரிகுமார், 30. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள்
உள்ளன. குடும்ப தகராறு காரணமாக, நேற்று முன்தினம், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, எழும்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
its to much
பதிலளிநீக்கு