புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


விஸ்வரூபம் படத்திற்கு கிடைத்த வரவேற்பு கமலை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. விஸ்வரூபம் படம் முடிவடையும் போது ´விஸ்வரூபம் 2´ இந்தியாவில் தொடங்குவது
போன்று அமைத்து இருந்தார்.

´விஸ்வரூபம் 2´ படத்தின் 25% காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டு விட்டதாகவும், விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு துவங்கப்படும் என்று அறிவித்தார்.

´விஸ்வரூபம்´ படத்தினை கமலே தயாரித்து, நடித்து, இயக்கி இருந்தார். ஆனால் ´விஸ்வரூபம் 2´ படத்தினை கமல் நடித்து இயக்க இருக்கிறார். ´விஸ்வரூபம் 2´ படத்தினை பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறது ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம்.

கமல் நடிக்க இருக்கும் 2 படங்களை தயாரிக்க இருக்கிறது ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம். முதலாவதாக ´விஸ்வரூபம் 2´ படமும், அதனைத் தொடர்ந்து கமல் நடிக்க இருக்கும் படம் என 2 படங்களை தயாரிக்க இருக்கிறது.

இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ´விஸ்வரூபம் 2´ படத்தில் விமானத்தில் வைத்து கமல், ராகுல் போஸ் மோதும் ஒரு பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சியை படமாக்க கமல் திட்டமிட்டு இருப்பது கூடுதல் தகவல்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top