இந்தியாவில் 40 வயதுப் பெண் கழுத்து அறுத்துக் கொலை
சேலத்தில் 40 வயதான பெண் கழுத்து அறுத்துக் கொல்லப்பட்டார். இவர் திருமணமாகி கணவரைப் பிரிந்தவர்.
திருமணமான இன்னொரு ஆணுடன் வாழ்ந்து வந்தவர். கொலையைச் செய்தது யார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம், காசக்காரனூரைச் சேர்ந்த சுப்பிரமணியன். இவரது மனைவி பெயர் சாந்தி. 40 வயதாகிறது. இந்தத் தம்பதிக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். இருவரும் 10 வருடத்திற்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.
இந்த நிலையில் ஜாகிர்ரெட்டிப்பட்டியைச் சேர்ந்த 46 வயதான பாலசுப்ரமணியனுடன் சாந்திக்குத் தொடர்பு ஏற்பட்டது. பாலசுப்ரமணியனுக்கு திருமணமாகி 25 வயதில் ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். முதல் மனைவி பெயர் தனலட்சுமி.
தனிமையில் வசித்து வந்த சாந்திக்கு, பாலசுப்ரமணியனுடன் கிடைத்த பழக்கம் நெருக்கமான நட்பாக மாறி, தன்னையே கொடுக்கும் அளவுக்குப் போனது. இதையடுத்து இருவரும் கல்யாணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழத் தொடங்கினர்.
முதல் மனைவி தனலட்சுமியுடனும் குடும்பம் நடத்தி வந்த பாலசுப்ரமணியன், மறுபக்கம் சாந்தியுடனும் குடும்பம் நடத்தினார். சாந்தியை தனியாக வீடு பார்த்து வைத்தார். அடிக்கடி வீட்டை மாற்றினார்.
2 மாதத்திற்கு முன்புதான் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே ஒரு அபார்ட்மென்ட்டில் வீடு பார்த்து சாந்தியை குடித்தனம் வைத்தார் பாலசுப்ரமணியன். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் சாந்தியின் வீடு அரைகுறையாக திறந்த நிலையில், வீட்டில் டி.வி.யில் பாட்டு விடிய, விடிய ஓடிக்கொண்டும், மின்விசிறியும் ஓடிக்கொண்டு இருந்தது. அதே வேளையில் வீட்டில் இருந்து ஒருவித துர்நாற்றமும் வீசியது.
நேற்று சாந்தியின் வீட்டை தாண்டி அபார்ட்மெண்ட் உரிமையாளர் ஹரிபாஸ்கர் சென்றபோது, சாந்தியின் வீட்டில் சத்தமாக டி.வி. ஓடுவதை கண்டு, அதை குறைக்க சொல்வதற்காக சாந்தியின் வீட்டுக்கதவை முழுமையாக தள்ளினார். அப்போது வீட்டின் தரையில் சாந்தி கழுத்து அறுபட்ட நிலையில் நைட்டியுடன் அரை நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அந்த அறை முழுவதும் ரத்தம் வெளியேறி கிடந்தது.
இது குறித்து ஹரிபாஸ்கரின் மனைவி பட்டம்மாள், சாந்தியுடன் குடும்பம் நடத்தி வரும் பாலசுப்பிரமணியனுக்கு தகவல் தெரிவித்தார். அவரும் வீட்டிற்கு விரைந்து வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சாந்தி கொலை செய்யப்பட்டு கிடப்பது குறித்து பள்ளப்பட்டி போலீசாருக்கு பாலசுப்பிரமணியன் தகவல் தெரிவித்தார்.
வீடு புகுந்து சாந்தியை மர்ம ஆசாமிகள் கொலை செய்தபோது, அவர்கள் மீதும் ரத்தக்கறை படிந்தது. ரத்தக்கறை படிந்த கை, கால்களை வீட்டின் கழிவறைக்கு சென்று கழுவிவிட்டு, வளைந்துபோன கத்தியையும் அங்கேயே விட்டு கொலையாளிகள் சென்றுள்ளதும் தெரியவந்தது.
கொலை செய்யப்பட்ட சாந்தி நைட்டியுடன் அரைநிர்வாண கோலத்தில் கிடந்தார். அதை மறைக்க கொலையாளில் வீட்டில் இருந்த ஒரு சேலையை அவர் மீது தூக்கி வீசிச்சென்றுள்ளனர். எனவே, சாந்தியை வலுக்கட்டாயமாக கற்பழித்து விட்டு, மர்ம ஆசாமிகள் கொலை செய்து விட்டு தப்பி சென்றிருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது.
சாந்தியுடன் கடந்த 10 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்த பாலசுப்பிரமணியம் போலீஸாரிடம் கூறுகையில், சாந்தியுடன் நான் திருமணம் ஆகாமல் குடும்பம் நடத்தி வந்தது உண்மைதான். வழக்கமாக வீட்டிற்கு வராவிட்டால் செல்போனில் சாந்தியுடன் பேசிவந்தேன். நேற்று என்னால் பேசமுடியவில்லை. ஏனென்றால் செல்போனில் சார்ஜ் சரிவர இல்லை என்று கூறியுள்ளார்.
சேலம் பகுதியை இந்த சம்பவம் பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக