பிரித்தானியாவின் செல்டெனம் மருத்துவமனையில் பிறந்த இக்குழந்தைக்கு ஜோர்ஜ் கிங் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இக்குழந்தை 6 வாரங்களுக்கு முன்னர் பிறந்துள்ளது. பிறக்கும் போது குழந்தையின் எடை 15 பவுண்டுக்கும் அதிகமாகும்.
இதனால் பிரசவத்தின் போது குழந்தையின் தாய் பெரும் சிரமத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.
பிரசவத்தின் நடுவே ஜோர்ஜின் தோல் மாட்டிக்கொண்டதாகவும் எனவே 5 நிமிடங்களுக்கு கஷ்டப்பட்டதாகவும் அவனது தாயார் தெரிவித்துள்ளார். மேலும் சுமார் 20 டொக்டர்கள் சேர்ந்தே இப்பிரசவத்தை மேற்கொண்டுள்ளனர்.
குழந்தை பிறந்த போது அவன் உயிர் பிழைப்பதற்கான சாத்தியம் வெறும் 10 வீதம் மட்டுமே என டொக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் ஜோர்ஜ் தற்போது ஆரோக்கியமாக உள்ளதாக அவனது தாயார் தெரிவித்துள்ளார்.
மேலும் பிறந்து 3 முதல் 6 மாதம் வரையான குழந்தைகள் அணியும் ஆடைகளையே ஜோர்ஜுக்கு அணிவிப்பதாக அவனது பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக