புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


யாழ். கோவில் வீதியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இயங்கிவந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.


யாழ். பிரதேச செயலக அதிகாரிகளால் இன்று (28) இடம்பெற்ற இம்முற்றுகையின் போது ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஏழு பேரில் பெண்கள் மூவரும் ஆண்கள் நால்வரும் அடங்குவதாக யாழ். பிரதேச செயலர் திருமதி சுகுணவதி தெய்வேந்திரம் தெரிவித்தார்.

கைதானவர்களில் பல்கலைக்கழக மாணவன் ஒருவரும் மாணவி ஒருவரும் அடங்குவர்தாக அவர் குறிப்பிட்டார்.

இவர்களது பல்கலைக்கழக அடையாள அட்டை யாழ். பிரதேச செயலகத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஏனையவர்களில் யாழ்-கொழும்பு தனியார் பஸ் சாரதி ஒருவரும் விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டு வந்த பெண்ணும் அடங்குவதாக அவர் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின்னர் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டதாக யாழ். பிரதேச செயலர் திருமதி சுகுணவதி தெய்வேந்திரம் தெரிவித்தார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top