தற்போதைய நவீன யுகத்திலும், தீயில் இறங்கி, நடத்தையை நிரூபிக்கக் கோரும் பழமைவாதிகள், இந்தியாவில் உள்ளனர் என்பதற்குச் சான்றாக, பீகாரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
பீகார், ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள, அகோரி என்னும் கிராமத்தில், பழமையான, மத பழக்க வழக்கங்களைப் பின்பற்றும் மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் ஒருவரான, முல்க் லெட்டூர் ரேடியன் என்பவரது மனைவி, தன் கணவரிடம் தகவல் தெரிவிக்காமல், நோயால் பாதிக்கப்பட்டிருந்த தன் சகோதரியின் கணவரைப் பார்க்கச் சென்றார்.
இதை அறிந்த, ரேடியனின் உறவினர்கள், சந்தேகம் அடைந்து, அவர் மனைவியைத் துன்புறுத்தினர். இந்தப் பிரச்னை, ஊர் தலைவரிடம் கொண்டு செல்லப்பட்டது.
அவர்களுடைய வழக்கப்படி, தீயில் இறங்கி நடந்து, உயிருடன் வெளியில் வந்தால் தான், அவர் கற்புள்ளவர் என்றும்; நல்ல நடத்தை உள்ளவர் என்றும் நம்பப்படும்.
அவ்வாறே, ரேடியனின் மனைவியும், தீயில் இறங்கி நடந்து, தன் நடத்தையை நிரூபிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.
உடனே, ஒரு மரத்தை வெட்டி, 3 அடிக்கு நீளத்திற்கு, தீ மூட்டப்பட்டது. அந்தத் தீயில், அப்பெண் இறங்கி நடந்து, தன் நடத்தையை, ஊருக்கு நிரூபித்தார்.
பொலிஸாருக்கு இதுகுறித்து, எந்த புகாரும் தெரிவிக்கப்படவில்லை. தற்போது அந்தப் பெண், தீப்புண்ணுக்கு, மருந்து இட்டுக் கொண்டிருக்கிறார்.
0 கருத்து:
கருத்துரையிடுக