மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 40ம் கொலனியில் தனது இரண்டு வயது குழந்தைக்கு நஞ்சூட்டி விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்ற தாய் தற்போது மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனது கணவர் களுவாஞ்சிக்குடியிலுள்ள வேறு ஒரு பெண்ணுடன் கொண்டுள்ள தொடர்பு காரணமாகவே இவர் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று மாலை 4.30 மணியளவில் நடைபெற்ற இச்சம்பவத்தில் குழந்தை உயிரிழந்ததுடன், தற்கொலைக்கு முயன்ற 28 வயதான தாய் தற்போது சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அயல் வீட்டாரின் தகவலையடுத்தே, பொலிஸார் விரைந்து செயற்பட்டு தாயைக் காப்பாற்றியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கணவன் மனைவிக்கிடையில் தகராறுகள் அடிக்கடி நடைபெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலதிக விசாரணைகளை வெல்லவெளி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக