புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சூளைமேட்டில் சித்தியின் கள்ள தொடர்பை தட்டிக்கேட்ட வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டார். சித்தியின் கள்ளக்காதலன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நுங்கம்பாக்கம் கீழ
நமச்சிவாயபுரம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ (30). கூலி தொழிலாளி. இவர் நேற்றிரவு சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலை சந்திப்பில் சென்றபோது 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் அவரை வெட்டியது. அங்கு வந்த சூளைமேடு போலீசார், இளங்கோவை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக சூளைமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து, சூளைமேட்டை சேர்ந்த பார்த்திபன் (30) அவரது நண்பர்களான கார்த்திக் (26), யுவராஜ் (34), வினோத் (25) ஆகியோரை கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூற¤யது: கொலை செய்யப்பட்ட இளங்கோவின் சித்தி காமாட்சியின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். தற்போது, அவர் தனியாக வசித்து வருகிறார். அப்போது, காமாட்சிக்கும் பார்த்திபனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கள்ளத் தொடர்பை இளங்கோ தட்டி கேட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் 28ம் தேதி இது தொடர்பாக பார்த்திபனுக்கும், இளங்கோவுக்கும் மோதல் ஏற்பட்டது. பார்த்திபன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதில், இருவருக்கும் முன் விரோதம் ஏற்பட்டது. இதற்கிடையில், அவமானம் தாங்காமல் பார்த்திபன் குடும்பம் வேறு இடத்திற்கு இடம் பெயந்தது. இதனால், கோபத்தின் உச்சத்திற்கு சென்ற பார்த்திபன், சிறையிலிருந்து வந்ததும் இளங்கோவை கொலை செய்திருக்கிறார். இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. கைதான 4 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top