புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


குழந்தைகள் மீது பெரியவர்களுக்கு ஆசையும், விருப்பமும் ஏற்படுவதற்கு குழந்தைகளின் குறும்புத் தனமும், அவர்களது கள்ளம் கபடம் இல்லா உள்ளமும்  தான் காரணமாகும்.


குழந்தைகளை நாம் காணும் போது அவர்களோடு நாம் கொஞ்சி விளையாடுவதும் குழந்தைகளை அள்ளி அணைத்து முத்தமிட்டு அவர்களோடு குழந்தைகளுக்கே உரித்தான மழலை மொழியிலே உரையாடி அவர்களின் உலகத்திற்கே நாம் சென்று விடுவது எம் அனைவருக்கும் பரீட்சையமான அனுபவமாகும்.

பெருமானார் (ஸல்) அவர்கள் கூட ஒரு முறை, தனக்கு 10 குழந்தைகள் இருந்தும் இதுவரை நான் யாரையும் முத்தமிட்டதில்லை எனக் கூறிய ஸஹாபியை கண்டித்து இரக்கம் காட்டாதவர்கள் இரக்கம் காட்டப்படமாட்டார்கள் என அறிவுரை கூறியனுப்பிய சம்பவமும் நாம் அறிந்ததே.

இவ்வாறு  குழந்தைகளை மிகப் பெரும் செல்வமாகக் கருதும் நாம் குழந்தைகளுக்கு ஒரு சிறிய நோ ஏற்பட்டால் கூட துடி துடித்துப் போகின்றோம். அவர்கள் விரைவாக குணமாகிவிட வேண்டும் என அங்குமிங்கும் அலைந்து திரிந்து வைத்திய ஆலோசனைகளை நாடி, இறைவனைப் பல முறை பிரார்த்தித்து அவர்கள் முழுமையாகக் குணமடைந்த பின்னரே நாம் நிம்மதியடைகிறோம்.

ஆனால் சிலவேளைகளில் குழந்தைகள் சில பாரதூரமான நோகளுக்கு உள்ளாகும் போது நாம் மிகவும் மனமுடைந்து போவதுண்டு.

ஆனால் தனது கால் விரல்களையே கடித்துத் துப்பும் ஒரு குழந்தையைப் பற்றி எம்மில் அதிகமானோர் அறிந்திருக்க மாட்டோம். கேட்கும் போதே உடல் புல்லரித்துப் போகும். அக் குழந்தையின் முழு சுயசரிதையையும் கேட்கும் போது உங்களுக்கு  அழுகை வரலாம். ஆம் எனக்கும் அப்படித்தான் இருந்தது.

இச்சிறுமி நுவரெலியாவைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் குடும்பத்தில் 3 ஆவது குழந்தையாக ஆறு வருடங்களுக்கு  முன்னர் பிறந்தாள்.

பிரசவம் சுகப் பிரசவமாகவே அமைந்திருந்தது. குழந்தையும் மிகவும் சுறுசுறுப்பாகவும் அழகாகவுமே காணப்பட்டது.

ஏற்கனவே இரண்டு ஆண் குழந்தைகளைப் பிரசவித்த அத்தாக்கு இம் முறை பெண் குழந்தையைப் பெற்றெடுத்தது பூரிப்பாகவே இருந்தது. குழந்தையை ஆரத்தழுவி அதன் முதல் அழுகையில் இன்பம் கண்ட அவளுக்கு குழந்தையில் இருந்த அந்த ஆபத்தை அறிந்திருக்க வாப்பிருக்கவில்லை.

வழமை போன்று குழந்தை மற்றும் சிறுவர் பிரிவு வைத்தியர் குழந்தையை பரிசோதித்த போது குழந்தையின் முதுகுப் புறக் கீழ்ப்பகுதியில் ஓர் கட்டி இருப்பதாகவும் அது நரம்பு மண்டலத்தோடு தொடர்பானதாக  இருப்பதால் குழந்தை மேலதிக வைத்தியப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படல்  வேண்டும் என கூறிய போது அப்பெற்றோர்கள் இடிந்தே போனார்கள். மேலதிக பரிசோதனைகள் பல வைத்திய நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்டன.

குழந்தைக்கு ஏற்பட்டிருப்பது Myelome ningocele என்றும் அவசரமாக சத்திர சிகிச்சை மேற்கொண்டு குழந்தையின் உயிரை காப்பாற்ற வேண்டும் எனக் கூறி பிறந்து 8 ஆவது நாளன்று சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சத்திர சிகிச்சை குழந்தையின் உயிரை காப்பாற்றியதே தவிர குழந்தையின் நீண்ட காலப் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையவில்லை. அமையவும் மாட்டாது. (ஏனெனில் நரம்புகள் பாதிக்கப்பட்டால் குணப்படுத்த முடியாது)

ஆணின் விந்தானது பெண்ணின் முட்டையை கருக்கட்டுவதோடு குழந்தையின் விருத்தி ஆரம்பமாகிறது. ஒவ்வொரு தொகுதிகளும் மிகத் துல்லியமாக விருத்தியடைகின்றன. இதில் நரம்புத் தொகுதியின் விருத்தி மிக மிக முக்கியமானது.

நரம்பு மண்டல விருத்தியில் பல நூற்றுக்கணக்கான காரணிகள் பங்கேற்கின்றன. (இவற்றில் பலவற்றைப் பற்றி மருத்துவ உலகம் இன்னும் ஆழமாக அறியவில்லை)  இவற்றில் மாற்றங்கள் ஏற்படும் போது பல குறைபாடுகள் ஏற்படுகின்றன.

உதாரணமாக நரம்பு மண்டல விருத்தியில் போலிக் அமிலம் (Folic Acid) குறிப்பிடத்தக்கயவு பங்கை வகிக்கிறது. இதன் குறைபாடு நரம்பு மண்டலத்தில் பல நிரந்தரக் குறைபாடுகளை ஏற்படுத்தி வருவதனால் கர்ப்பிணித் தாமார்களுக்கு மேலதிகமாக போலிக் அமிலம் வழங்கப்படுகிறது.  கர்ப்பம் தரிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு  முன்பிருந்து ஆரம்பித்து பிரசவம் வரை இவ் வில்லையினை (சிறிய மஞ்சள் நிற வில்லை) பாவிப்பது மிகவும் சிறந்தது.

இதன் குறைபாட்டினாலோ அல்லது வேறு பல காரணங்களாலோ Spina bifida, Meningocele, Myelomening cale போன்ற பல குறைபாடுகள் ஏற்படலாம்.

இக்குழந்தைக்கு ஏற்பட்டிருப்பது Myelome ningocele எனும் நரம்பியல் குறைபாடாகும். அதாவது நரம்பு மண்டலத்தின் பிரதான பகுதியான முன்ணாணையும், நரம்புகளையும் பாதுகாப்பிற்காக மூடிக் காணப்படும் முள்ளந்தண்டெலும்புகள் சரியான முறையில் விருத்தியடையாமையினால் நரம்பு மண்டலம் வெளியிலே திறந்து காணப்படுவதோடு அதன் தொழிற்பாடுகள் செயலிழந்து போகின்றன.

மேலும் மூளைய முன்ணாண் பாபொருள் (மூளை மற்றும் முண்ணானைப் பாதுகாத்துக் காணப்படும் திரவம்)  வேகமாக உடலை விட்டு வெளியேறுவதால் மூளையானது மண்டையோட்டிற்குள் இருந்து கீழிறங்குவதால் (Tonsilar herniation) மூளைய முண்ணாண் பாபொருள் கால்வா அடைபடுகிறது. இதனால் மூளையுள் சுரக்கும் திரவம் வெளியேற முடியாமல் மூளையினுள் செறிவடைவதால் தலை மிக வேகமாக வீக்கமடையும். இதனால் தலை மிக மிகப் பெரிதாகக் காணப்படுவதோடு  தலையின் பாரத்தினை குழந்தைகளின் கழுத்தினால் தாங்கிக் கொள்ள முடியாது போகிறது.

இதனால் பார்வைக் குறைபாடுகளும் வேறு பல நரம்பியல் பிரச்சினைகளும்  ஏற்படுகின்றன. இதனை தடுப்பதற்கு மூளையிலிருந்து வயிறுவரை செயற்கை குழா ஒன்று சத்திர சிகிச்சை மூலம் பொருத்தப்படுகிறது. (Ventricular Peritoneal Shunt) இச்சிறுமியும் அவளது முதலாவது வயதில் இச் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டாள். இதனால் இப்பிரச்சினை கட்டுப்படுத்தப்பட்டது. Myelome ningocele குறைபாட்டின் அடுத்த பிரச்சினை இடுப்பு மற்றும் அதற்கு கீழான பகுதிகளுக்குப் பொறுப்பான நரம்புகள் செயலிழந்து விடுவதாகும். இதனால் கால்கள் உணர்விழந்து போகின்றன. (Sensory loss) சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதற்கு பொறுப்பான நரம்புகள் செயலிழந்து விடுவதனால்  சிறுநீர் மற்றும் மலம் தன்னை அறியாமலே வெளியேறிவிடும். (Urinary & Foecal incontinance) குழந்தை பெரியவளாக வளர்ந்த பின்பும் அவளை அறியாமலேயே சிறுநீர் மலம் வெளியேறும். இதனால் வாழ்நாள் முழுவதும் Pampus / Diapers அணிய வேண்டும்.

மிகவும் அதிர்ச்சியான விடயம் என்னவென்றால் இச்சிறுமி தனது கால் விரல்களையே கடித்துத் துப்பும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறாள்.

ஒரு வயதுக் குழந்தையாக இருந்த போது ஒருநாள் குழந்தையின்  வாயிலிருந்து இரத்தம் வடிந்தோடுவதைக் கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். கைகளிலும் இரத்தக் கறைகளைக் கண்ட பெற்றோர் குழந்தை ஏதாவது பிராணிகளை கடித்து விட்டதாக எண்ணித் தேடிய போது தான் அந்த அதிர்ச்சி காத்திருந்தது. கால் விரல்களில் இருந்து இரத்தம் வடிந்தோடியதைக் கண்ட போது தான் குழந்தை கால் விரல்களை கடித்திருப்பதை உணர்ந்தனர். பின்னர் இப்படியான சந்தர்ப்பங்கள்  அடிக்கடி நிகழ  ஆரம்பித்தன. இப்போது இச்சிறுமிக்கு வயது ஆறு ஆகின்ற போதும் தான் கோபப்படும் போதும், தனது வெறுப்பை வெளிக்காட்டும்  போதும், அடம்பிடிக்கும் போதும் இரத்தம் வடிய, வடிய கால் விரல்களைக் கடித்துத் துப்பும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறாள். பெற்றோர்கள் எவ்வளவு முயன்றும் இப்பழக்கத்தை கைவிடுவது இன்னும் கை கூடவில்லை. நகம் கடிப்பது எவ்வாறு எமக்கு வலிப்பதில்லையோ, அதுபோல இச்சிறுமியின் கால்களில் உள்ள உணர்வு நரம்புகள் செயலிழந்து விட்டதால் அவள் வலியை  உணர்வதில்லை.

மேலும் இவளது கால்களின் பாதங்கள் மேல் நோக்கித் திரும்பியவையாகும். இது மருத்துவத்திலே Talipus Equina Varus என அழைக்கப்படுகிறது. சத்திர சிகிச்சை முழுமையாக பயனளிக்காததனால்  இச்சிறுமியால் நடக்கவும் முடியாது.

சுவாரஸ்யமான விடயம் யாதெனில் நரம்பு மண்டலத்தோடு தொடர்பான பல்வேறுபட்ட பிரச்சினைகளோடு  வாழும் இச்சிறுமியின் மூளை வளர்ச்சி இறைவனின் உதவியால் பாதிக்கப்படவில்லை. அதனால் மிகவும் சுறுசுறுப்பானவளாகவும் ஏனைய பிள்ளைகளைப் போன்று விடயங்களை இலகுவில் விளங்கிக் கொள்ளக் கூடியவளாகவும் இருப்பதோடு தமிழ் மற்றும் சிங்கள மொழிகளை சரளமாக பேசக் கூடியவளாகவும் இருக்கின்றாள்.

பெற்றோர்  இறைவன் மீது நம்பிக்கை வைத்தவர்களாக இக் குழந்தையோடு கஷ்டப்படுகிறார்கள். பொருளாதாரப் பிரச்சினைகளோடும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இச்சிறுமியால் நடந்து பாடசாலைக்குச் செல்லவும் முடியாது. பெற்றோரினால் ஒரு முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்தவும் முடியாதுள்ளதனால் பிள்ளையின் கல்விச் செலவுகளுக்காக மருத்துவ ரஜரட்ட பீடத்தைச்சேர்ந்த ஓர் சகோதரி,  மாதா மாதம் ஒரு தொகைப் பணத்தை வழங்க முன் வந்திருப்பது பெற்றோருக்கு சற்று ஆறுதல் அளிக்கின்றது.

இவ்வாறு  பல சிரமங்களோடு  வாழ்க்கையை நகர்த்தும் இச்சிறுமிக்காகவும் அவளது பெற்றோருக்காகவும் இறைவனிடத்தில் நாம் பிரார்த்திப்பதோடு எம்மையும் எமது குழந்தைகளையும் சுகதேகியாக வாழச் செத வல்லோன் அல்லாஹ்வுக்கு என்றும் நன்றி செலுத்துவதற்கு கடமைப்பட்டுள்ளோம்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top