புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பெரியபாளையம் அருகே தீ வைத்து எரித்த கள்ளக்காதலனை பெண் கட்டிப்பிடித்தார். இருவரும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெறுகின்றனர்.


சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (52). தச்சு தொழிலாளியான இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ஜெயா(47). இவருக்கு 3 குழந்தை உள்ளனர். அமைந்தகரையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்தபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து, வீட்டைவிட்டு ஓடிய ஜோடி, பெரியபாளையம் அருகே உள்ள மேல் மாளிகைப்பட்டு கிராமத்தில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்தனர். வீட்டின் அருகே உள்ள ஆண்களிடம் ஜெயா சிரித்து பேசுவாராம். இது கண்ணனுக்கு பிடிக்கவில்லை.

இது சம்பந்தமாக நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இருவருமே குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. கோபம் அடைந்த கண்ணன், திடீரென மண்ணெண்ணெயை ஊற்றி ஜெயாவை கொளுத்திவிட்டார். படுகாயம் அடைந்த அவர், கண்ணனை கட்டிப்பிடித்துக்கொண்டார்.

அவர்களின் கதறல் சத்தம் கேட்டு ஆட்கள் வந்தனர். தீக்காயத்துடன் துடித்த அவர்களை மீட்டு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவரும் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து பெரியபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top