நடிகர் சாந்தனு இளையதளபதி விஜய்யின் தீவிர ரசிகராம்
கொலிவுட்டில் சக்கரக்கட்டி படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனு, நாயகன் விஜய்யின் தீவிர ரசிகர் ஆவார்.
இப்படத்தை தொடர்ந்து இவர் நடித்த கொலிவுட் படங்களில் எந்த ஒரு படமும் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுக்கவில்லை.
இந்நிலையில் தங்கர் பச்சான் இயக்கத்தில் இனியா ஜோடியாக நடித்த அம்மாவின் கைப்பேசி படமும் சொதப்பி விட்டது.
இதனை அடுத்து லவ் இன் ஹைதராபாத் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வரும் சாந்தனுவுக்கு கைவசம் இரண்டு தமிழ் படங்கள் மட்டுமே இருக்கின்றன.
இதற்கிடையில் தனது பிடித்தமான கதாநாயகனாக விஜய்யின் ஸ்டைலான புகைப்படங்களை சேகரித்து வருகிறாராம் சாந்தனு.
அவரது நடிப்பு மற்றும் நடன அசைவுகளில் கூட தளபதியின் ஸ்டைல் அவ்வப்போது எட்டிப் பார்க்கும்.
விஜய் நடிக்கும் ஜில்லா படத்தில் சாந்தனுவின் அம்மா பூர்ணிமா பாக்யராஜ் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.
தனக்கு தான் விஜய்யுடன் நடிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை, அம்மாவுக்காவது கிடைத்திருக்கிறதே என்று மகிழ்ச்சியாக காணப்படுகிறார் சாந்தனு.
0 கருத்து:
கருத்துரையிடுக