புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

போட்டா போட்டி படத்தை இயக்கிய யுவராஜின் இயக்கத்தில் தெனாலி ராமன் என்ற படத்தில் வடிவேலு நடிக்கிறார்.

கடந்த பல மாதங்களாக சினிமாவில் வாய்ப்பில்லாமல் ஒதுங்கியிருந்த வடிவேலு, புலிகேசி 2ம் பாகம், ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியானது.

இதில் புலிகேசி 2ம் பாகத்தில் வடிவேலு சொன்ன மாற்றங்களை சிம்புதேவன் செய்ய மறுத்தமையால் அப்படத்திலிருந்து விலகினார்.

பின்னர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஆப்ரிக்காவில் வடிவேலு படத்தை தயாரிக்க யாரும் முன்வரவில்லை.

இதனிடையே தற்போது "கஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும்" என்ற படத்தில் நடிக்கிறார்.

ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை யுவராஜ் இயக்க டி. இமான் இசையமைக்கிறார்.

தன் மகள் கல்யாணத்தை முடித்த பின்பு இப்படத்தில் வடிவேலு நடிப்பார் என கூறப்படுகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top