கலிபோர்னியாவை சேர்ந்த பச்சை குத்தும் கலைஞர் மிஷெல் (வயது 29). இவர் வாரத்திற்கு முப்பத்தி ஆறு லிட்டர் பன்றி ரத்தம் குடிப்பதாக டிவி நிகழ்ச்சி ஒன்றில்
கூறியுள்ளார்.
பன்றி ரத்தம் மட்டுமின்றி,
வாரத்திற்கு ஒரு முறை மனித ரத்தத்தையும் குடிப்பதாக கூறும் இவர், ரத்தத்தை உணவோடு கலந்தும் சாப்பிடுகிறார். ஓய்வெடுக்கும்போதும், ஓவியம் வரையும்போதும் ரத்தம் குடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கும் இவர், இதற்காகவே குளிர் சாதனப்பெட்டியில் உறைந்த ரத்தத்தை வைத்திருக்கிறார்.
இதைப்பற்றி மிஷெல் கூறுகையில், “சிலருக்கு சிகரெட் பிடிப்பது போல் எனக்கு ரத்தம் பிடித்திருக்கிறது. மனித ரத்தம் பன்றியின் ரத்தத்தை விட சுவையானது. ஆணின் ரத்தம் பெண்ணின் ரத்தத்தைவிட கெட்டியாக இருக்கும்.
முடிந்த வரை வாரத்திற்கு ஒருமுறை நெருங்கிய நண்பர்களின் கையிலிருந்து ரத்தம் குடிப்பேன். ரத்தம் எனக்கு பிடிக்கும் என்பதற்காக நான் காட்டேரி கிடையாது. இள வயதில் மன அழுத்தத்தால் என்னை காயப்படுத்திக் கொள்வேன். அப்பொழுது ரத்தத்தை உரியும்போது ஏற்பட்ட பழக்கம்தான் இது” என்கிறார்.
இதைப்பற்றி இதுவரை எதுவும் அறியாமல் இருந்த அவருடைய தாயார், மிஷெல் 4,500 லிட்டர் ரத்தம் குடித்திருக்கிறார் என்பதை கேட்டு மனம் உடைந்துப் போனார். பின்பு அவரை மருத்துவரிடம் சென்று சிகிச்சைப் பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
கொண்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்து:
கருத்துரையிடுக