புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மூலக்கரைப்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் தங்கரேவதி (வயது 24). இவருக்கும் பாளையை அடுத்த சிவந்தி பட்டி பக்கமுள்ள
ஆலங்குளம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகத் தேவர் என்பவரின் மகன் மாடசாமி (26) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி சந்தித்துபேசி தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். மேலும் பல இடங்களுக்கு தனியாக சென்றுவந்துள்ளனர். இதனால் அவர்களுக்கிடையே நெருக்கம் அதிகமானது. மிகவும் நெருங்கி பழகியதால் தங்கரேவதி கர்ப்பமானார். ஆகவே தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு காதலன் மாடசாமியை தங்கரேவதி வற்புறுத்தி வந்துள்ளார்.

ஆனால் திருமணம் செய்து கொள்வதாக கூறி மாடசாமி காலம் தாழ்த்திவந்தார். எப்படியும் காதலன் தன்னை திருமணம் செய்துகொள்வார் என்ற நம்பிக்கையில் தங்க ரேவதி இருந்துவந்தார்.

இந்தநிலையில் காதலியை திருமணம் செய்துகொள்ள மாடசாமி மறுத்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த தங்கரேவதி, காதலன் மாடசாமி மீது அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி மாடசாமியை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். தங்கரேவதி பெற்றோர் வீட்டிற்கு செல்ல விருப்பம் இல்லை என்று கூறியதால் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நாங்குநேரியில் உள்ள ஒரு மகளிர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். தற்போது தங்கரேவதி 9 மாதம் கர்ப்பமாக இருந்தார்.

இந்நிலையில் ஜெயிலில் அடைக்கப்பட்ட மாடசாமி ஜாமீனில் வெளியே வந்தார். கற்பழிப்பு வழக்கில் சிக்க வைத்து, தன்னையும் தனது குடும்பத்தையும் அவமானப்படுத்தியதால், காதலி தங்க ரேவதியை பழிவாங்க மாடசாமி திட்டமிட்டார்.

அதன்படி தங்கரேவதி தங்கியிருந்த மகளிர் காப்பகத்திற்கு மாடசாமி நேற்று சென்றிருக்கிறார். தான் திருமணம் செய்து குடும்பம் நடத்த தயாராக இருப்பதாக மாடசாமி கூறியிருக்கிறார். அதனை உண்மை என நம்பிய தங்கரேவதி, மாடசாமியுடன் அவரது ஊருக்கு வந்தார்.

இரவில் ஆலங்குளம் கிராமம் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்கு வந்ததும், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து காதலி தங்கரேவதியை மாடசாமி சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார். பின்பு அப்பகுதியில் உள்ள நிலத்தில் குழிதோண்டி தங்கரேவதியின் உடலை புதைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

இரவு நேரத்தில் உடலை புதைத்ததால் சரியாக புதைத்தோமா? என்ற சந்தேகம் மாடசாமிக்கு வந்துள்ளது. ஆகையால் அதனை பார்க்க காதலி உடலை புதைத்த இடத்திற்கு இன்று காலை சென்றார். காதலி கொல்லப்பட்ட இடத்தில் ரத்தமாக கிடந்தது. மேலும் உடலும் சரியாக புதைக்கப்படாமல் வெளியே தெரிந்தது. ஆகையால் ரத்தம் கிடந்த இடத்திலும், பிணம் புதைக்கப்பட்ட இடத்திலும் மண்ணை எடுத்து போட்டுக்கொண்டிருந்தார்.

இதனை அவ்வழியாக சென்ற சிலர் பார்த்துவிட்டனர். அவர்கள் மாடசாமி நின்றுகொண்டிருந்த இடத்திற்கு சென்றனர். இதனால் பயந்துபோன மாடசாமி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதனால் சந்தேகமடைந்த அவர்கள் அந்த இடத்தில் பார்த்தபோது ரத்தம்கிடந்தது.

இதுகுறித்து அவர்கள் சிவந்திபட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். மேலும் சம்பவ இடத்திலிருந்து ஆலங்குளம் கிராமத்தை சேர்ந்த மாடசாமி ஓடியதாகவும் கூறினர். இதனையடுத்து சிவந்திபட்டி போலீசார், மாடசாமியை தேடினர். காட்டுப்பகுதியில் மறைந்திருந்த அவரை போலீசார் சுற்றிவளைத்தது பிடித்தனர்.

அவரிடம் விசாரித்தபோது, தனது காதலியை கடத்திவந்து வெட்டிக்கொலை செய்து, உடலை குழிதோண்டி புதைத்த அதிர்ச்சி தகவலை கூறினார். இதனையடுத்து மாடசாமியை போலீசார் கைது செய்தனர். அவர் கூறிய தகவலின் அடிப்படையில் தங்கரேவதி உடலை தோண்டி எடுக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top