புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நடிகர் அர்ஜுன் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஒரு படத்தை இயக்கி நடிக்கிறார்.


நடிகரான அர்ஜுன் ‘சேவகன்’ படம் மூலம் இயக்குனராகவும் மாறினார்.

தொடர்ந்து சில படங்களை இயக்கிய அர்ஜுன் கடைசியாக 2006ம் ஆண்டு வெளிவந்த ‘மதராஸி’ படத்தை இயக்கினார்.

ஏறக்குறைய ஏழு வருடங்கள் கழித்து தற்போது புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறார்.

அது வழக்கமான காதல் ஆக்ஷன் படமாக இருக்காது என்றும் இன்றைய காலகட்டத்துக்கு தேவையான, அவசியமான ஒரு கருத்தை கதைக்களமாக கையிலெடுத்திருக்கிறேன் எனவும் அர்ஜுன் கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் தயாராகும் இந்தப் படத்தின் பட்ஜெட் 20 கோடிகளைத் தாண்டும் அளவுக்கு மிகப் பிரம்மாண்டமான படமாகத் தயாராக உள்ளது.

இப்படத்தை தயாரிப்பதும் அர்ஜுன் தான் குறிப்பிடத்தக்கது.!

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top