புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மத்தியபிரதேசம் சிவ்புரி அருகில் வயல்களில் மேய்ந்து பயிர்களை நாசம் செய்த 2 மாடுகள் தூக்கிலிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


ம.பி. மாநிலம் சிவ்புரி அருகில் உள்ளது மாயாபுரி கிராமம். இங்கு வசிக்கும் விவசாயி தர்ஷன்சிங். இவரது நிலத்தில் புகுந்த 2 மாடுகள் பயிர்களை மேய்ந்து முற்றிலும் நாசம் செய்தது.

அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களை மாடுகள் நாசம் செய்ததால் அவரும் குடும்பத்தினரும் கோபம் அடைந்தனர். 2 மாடுகளையும் பிடித்து கம்பு, கம்பியால் சரமாரியாக அடித்தனர்.

அப்படியும் ஆத்திரம் தீராமல், கிராமத்தில் உள்ள மரத்தில் 2 மாடுகளையும் நேற்று முன்தினம் தூக்கில் தொங்கவிட்டனர். துடிதுடித்த மாடுகள் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தன.


இதுபற்றி போலீசுக்கு ஊர் மக்கள் தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து விசாரித்தனர். மாடுகளை தூக்கில் போட்டதை தர்ஷன்சிங் உள்ளிட்ட 3 விவசாயிகள் ஒப்புக்கொண்டனர்.

பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து விசாரிக்கின்றனர். மாடுகளை தூக்கில் போட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top