பிரித்தானியாவில் உள்ள இரவு விடுதி ஒன்று, தங்களின் விளம்பரத்திற்காக பெண்களை இழிவுபடுத்தும் விதமாக நிகழ்ச்சியொன்றை நடத்தியது.
பிரித்தானியாவின் கெண்ட் மாநிலத்தின் நோச்செஸ்ட்டரில் உள்ள இரவு விடுதி ஒன்று, தங்களின் உடலழகை வெளிப்படுத்தும் பெண்களுக்கு விடுதிக்குள் நுழைய இலவச அனுமதி வழங்கியது.
இவர்கள் மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை விடுதிக்குள் இருக்கலாம்.
இதுகுறித்து உரிமையாளர்கள் கருத்து தெரிவிக்கையில், வேடிக்கையாகவே இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது, இது பெண்களின் மார்பழகை வெளிப்படுத்துவது பற்றியதாகும் என்று தெரிவித்தனர்.
ஆனால் நாடாளுமன்ற உறுப்பினரான ட்ரேசி குரோஷ் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், பெண்களை இழிவுபடுத்துவது போன்று இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது. பெண்களின் வடிவத்தையும் மீறி அவர்களது உடலின் வனப்புக் குறித்த பிம்பத்தை உருவாக்க நாங்கள் முயன்று வருகிறோம்.
இந்நிலையில் இந்த இரவு விடுதிகள் அவர்களின் மேனியழகை விளம்பரப்படுத்தி அவர்களை கவர்ச்சிப் பாவையாகக் காட்ட முயல்கின்றனர் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக