புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தொழிலதிபரும் அவரது கள்ளக் காதலியும் வீட்டின் படுக்கை அறையில் சரமாரியாக குத்தி கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக தொழிலதிபரின் தம்பி உள்பட 4 பேரை

தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இரட்டை கொலை சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் ராணித்தோட்டம் தடி டிப்போ தெருவில் வசித்து வந்தவர் மாஹின்ஷா (44). கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மனைவி பிரிந்து சென்று, 2 குழந்தைகளுடன் தனியே வசிக்கிறார். வடசேரியில் மாஹின்ஷா மசாலா ஏஜென்சி வைத்துள்ளார். மசாலா பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறார்.

தங்கம் வாங்கி விற்பது, வெளிநாட்டு கரன்சி பரிமாற்றம் ஆகியவையும் செய்து வந்தார். பிசினசுக்கு உதவியாக அவரது தம்பி அமீர் அனீஸ் இருந்து வந்தார். இரணியல் அடுத்த கட்டையன்விளையை சேர்ந்த கிறிஸ்டல் ராணி (35) என்பவர் மசாலா கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். இவர் திருமணமானவர். கணவர், குழந்தைகள் உள்ளனர்.

கிறிஸ்டல் ராணி முதலில் சாதாரண தொழிலாளியாகதான் சேர்ந்தார். நாளாவட்டத்தில் மாஹின்ஷாவுடன் நெருங்கத் தொடங்கினார். இதனால், கணவன், குழந்தைகளைக்கூட கவனிக்காமல் மாஹின்ஷாவுடனேயே தங்கினார். ராணிக்காகவே ரூ.15 ஆயிரம் வாடகைக்கு பங்களா வீட்டுக்கு மாஹின்ஷா மாறினார்.

அந்த வீட்டில் இருவரும் கணவன், மனைவி போல வாழ்ந்து வந்தனர். இது மாஹின்ஷாவின் தம்பி அனீசுக்கு பிடிக்க வில்லை. இதுதொடர்பாக மாஹின்ஷாவுடன் தகராறு செய்து வந்தார். இந்நிலையில், மாஹின்ஷாவின் உதவியாளராக இருந்து வந்த ராணி பண விவகாரங்களிலும் தலையிட ஆரம்பித்தார். இது அனீசுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இதுபற்றி தனது நண்பர்கள் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த ரபாய், சையது அலி, கட்டையன்விளை அன்பு ஆகியோரிடம் அனீஸ் கூறியுள்ளார். இவர்கள் அனைவரும் மாஹின்ஷாவுக்கும் தெரிந்தவர்கள்தான். இவர்களில் அன்புதான் கிறிஸ்டல் ராணியை மாஹின்ஷா கம்பெனியில் வேலைக்கு சேர்த்து விட்டவர்.

மாஹின்ஷா வீட்டில் இருந்து கிறிஸ்டல் ராணியை விரட்டுவது, மறுத்தால் கொலை செய்து ஆளையே காலி செய்துவிடுவது என திட்டமிட்டனர். நேற்று இரவு அனீஸ் உள்பட 4 பேரும் மாஹின்ஷா வீட்டுக்கு வந்தனர். வீட்டின் கீழ் தளத்தில் உள்ள பெட்ரூமில் மாஹின்ஷா, ராணி தூங்கிக் கொண்டிருந்தனர்.

மேல் மாடியில் வீட்டு வேலைக்காரர் கோவையை சேர்ந்த செல்லத்துரை (44) இருந்தார். அனீஸ், ரபாய், அன்பு, சையது அலி ஆகியோர் மாடிக்கு வந்து மது குடித்தனர். போதை தலைக்கேறிய பிறகு, நள்ளிரவு நேரத்தில் அனீஸ் கீழே வந்து மாஹின்ஷாவை எழுப்பினார். ராணியை உடனே வீட்டை விட்டு வெளியே துரத்துமாறு கூறி தகராறு செய்தார்.

சொத்தில் தனக்கு தர வேண்டிய பணத்தை தருமாறும் கேட்டுள்ளார். இதில் அண்ணன் - தம்பி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மற்றவர்களும் உள்ளே புகுந்து சண்டை போட்டனர்.

மாஹின்ஷாவை சரமாரியாக கத்தியால் குத்தினர். கை, கழுத்து, வயிறு பகுதிகளில் கத்திக்குத்து விழுந்ததில் அதே இடத்தில் மாஹின்ஷா ரத்த வெள்ளத்தில் இறந்தார். பின்னர், ராணியையும் குத்தினர். மார்பு, கழுத்து பகுதிகளில் கத்திகுத்து விழுந்ததில் அவரும் இறந்தார். அவர்களது அலறல் சத்தம் கேட்டு, மாடியில் இருந்து வேலைக்காரர் செல்லத்துரை இறங்கி வந்தார்.

அதற்குள், அனீஸ் உள்பட 4 பேரும் தப்பினர். ஹாலில் நிர்வாணமாக மாஹின்ஷாவும், படுக்கை அறையில் ராணியும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனே இதுகுறித்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

டி.எஸ்.பி. பாஸ்கரன், நேசமணிநகர் இன்ஸ்பெக்டர் சுடலைமணி மற்றும் ஆசாரிபள்ளம் போலீசார் வந்தனர். கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது. எஸ்.பி. மணிவண்ணனும் வந்து விசாரித்தார்.



மாஹின்ஷா, கிறிஸ்டல் ராணியின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.

செல்லத்துரை அளித்த புகாரின் பேரில் அமீர் அனீஸ், ரபாய், அன்பு, சையது அலி மீது ஆசாரிபள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அனீஸ் மட்டும் போலீஸ் பிடியில் சிக்கியதாக கூறப்படுகிறது. மற்றவர்களை பிடிக்க டி.எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
கொலையாளிகளாக கருதப்படும் ரபாய், நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்தவர். வெளிநாட்டில் வேலை பார்த்துள்ளார். கொலையை முடித்துவிட்டு உடனே பாரின் தப்ப அவர் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. அவரை பிடிக்க திருவனந்தபுரம், மதுரை விமான நிலையங்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

கட்டையன்விளை அன்புவை தேடி தனிப்படை போலீசார் திருவனந்தபுரம் விரைந்துள்ளனர். நள்ளிரவில் நடந்த இரட்டை கொலை சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top