புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சென்னை பகுதியில் கார்களை திருடி விற்று அதில் வந்த பணத்தில் நட்சத்திர ஓட்டல்களில் மது அருந்தி, துணை நடிகையுடன் உல்லாசமாக இருந்த கும்பல் சிக்கியது.


அம்பத்தூர் அடுத்த ஒரகடம் லட்சுமியம்மாள் நகர் அண்ணா தெருவை சேர்ந்தவர் மகேந்திரன். டிரைவர். அம்பத்தூர் - செங்குன்றம் நெடுஞ்சாலையில் விநாயகபுரம் பகுதியில் நேற்று முன்தினம் காரை நிறுத்திவிட்டு, நண்பரை பார்க்க சென்றார்.

சிறிது நேரம் கழித்து அவர் திரும்பியபோது காரை காணவில்லை என்றதால் திடுக்கிட்டார். இதுபற்றி, அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், எஸ்.ஐ. முத்துராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

காரை திருடியதாக அம்பத்தூர் அருகே சூரப்பட்டு திருமால் நகரை சேர்ந்த கோகுல கண்ணன் (25), ஜாபர்கான்பேட்டை கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்த அருண்குமார் (27), ஏழுகிணறு பேரக்ஸ் 1வது சந்தை சேர்ந்த பிரவீன்குமார் (23) ஆகியோரை கைது செய்தனர்.


இவர்கள் ஆக்டிங் டிரைவர்களாக உள்ளனர். இவர்கள் 3 பேரும் சேர்ந்து புதுச்சேரியில் 2 கார், மதுரவாயல், திருமங்கலம், அம்பத்தூர் பகுதிகளில் தலா ஒரு கார் திருடியதை ஒப்புக்கொண்டனர்.

கார்கள் விற்ற பணத்தில் நட்சத்திர ஓட்டலுக்கு சென்று மது அருந்தி ஜாலியாக இருந்துள்ளனர். மேலும், சினிமா துணை நடிகைகளை அழைத்து சென்று உல்லாசமாக இருந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

அம்பத்தூரில் திருடிய காரை மட்டும் போலீசார் பறிமுதல் செய்தனர். 3 பேரையும் இன்று காலை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top