புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


யாழ்ப்பாணம் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் தவறவிடப் பட்ட பணப் பையை கண்டெடுத்து ஒப்படைத்த 6 வயது முதலாம் ஆண்டு மாணவனை பணப்பையை

தவறவிட்ட பெண் ஆரத்தழுவி முத்தமிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், யாழ். ஏழாலை தெற்கு மயிலங்காடு இத்தூர் பாடசாலையில் முதலாம் தரத்தில் கல்வி பயின்று வரும் மாணவனான சிவலிங்கம் சம்சன் என்பவர் ஆலய வீதியில் நேற்று மதியம் பணப்பை ஒன்றை கண்டெடுத்து அதனைத் தனது தந்தையாரிடம் ஒப்படைத்துள்ளார்.

அந்தப் பணப்பை வேறு ஒரு வருடையது. இதனை யாரோ தவறவிட்டு விட்டார்கள். ஒப்படைப்பதற்கு ஆலய நிர்வாகத்தினரிடம் கையளிக்க வேண்டும் எனக் கூறி தந்தை மகனை அழைத்துக் கொண்டு ஆலய அறிவிப்பு கரும பீடத்திற்குச் சென்றுள்ளார்.

அதனை திறந்து பார்த்த ஆலய நிர்வாகத்தினர் இது தொடர்பாக ஒலிபெருக்கியில் அறிவித்துள்ளனர். ஆயினும் பணப் பையை தவறவிட்ட பெண்மணியும் இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னரே ஆலய அறிவிப்பு ஒலிபெருக்கி மூலம் அறிவித்துள்ளார்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கல்வியங்காடு கட்டைப்பிராயைச் சேர்ந்த கே.ரஞ்சி என்பவர் அதனைத் திறந்து பார்த்து அதற்குள் இருந்த பெறுமதியான ஒரு தொகைப் பணம், வீட்டுத்திறப்பு, வீட்டுவாயில் கதவுத் திறப்பு, அடையாள அட்டை உட்பட சகல ஆவணங்களையும் கண்ட மகிழ்ச்சியில் திளைத்து அந்தச் சிறுவனை ஆரக்கட்டித் தழுவி மகிழ்ந்தார்.

அவரின் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக மாணவனுக்கு பரிசு வழங்க முற்பட்டுள்ளார். ஆயினும் அதனை ஏற்க பெற்றோரும் அம்மாணவனும் விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
 
Top