கனடாவில் கேல்கரியைச் சேர்ந்த ஒரு பெண் தான் பெற்ற குழந்தைகளை ஆணா, பெண்ணா என்று கூடப் பார்க்காமல் ஒரு துணியில் சுற்றிக் குப்பைத் கூடைக்குள் எறித்து கொன்றுள்ளார்.
மெரிடித் போரோவிச்(Meredith Borowiec) (31) என்ற பெண் கடந்த 2008ம் ஆண்டில் ஒரு குழந்தை பெற்றுள்ளதையடுத்து கடந்த 2010ம் ஆண்டிலும் ஒரு குழந்தையை பெற்றுள்ளார். இரண்டு குழந்தைகளையும் பெற்றவுடனேயே குப்பையில் தொட்டில் போட்டு கொன்று விட்டார்.
அவர் கருவுற்ற காலத்தில் தன்னுடன் வேலை பார்த்த சக பணியாளர்களிடம் தான் கருவுறவில்லை என்றும் தனக்குக் கருப்பையில் ஒரு கட்டி வளர்ந்து வருவதாகவும் சொல்லி மற்றவர்களை ஏமாற்றி வந்துள்ளார்.
இதனை அறிந்த பொலிசார் இவர் மீது கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்து தற்பொழுது அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.