மதுகம அகலவத்தை பிரதேசத்தில் ஆபாச இறுவெட்டுக்கள் மற்றும் தற்போது திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ள சிங்கள திரைப்பட இறுவெட்டுக்களை விற்பனை செய்த நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான இரு சந்தேகநபர்களும் மதுகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதோடு, மதுகம பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.