மட்டக்களப்பு - ஏராவூர் ரயிலில் மோதுண்டு இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட ரயிலில் மோதுண்டே இப் பெண் உயிரிழந்துள்ளதாக ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் 32 வயதான மட்டக்களப்பு பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவரது சடலம் மட்டக்களப்பு பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.