நயீனாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்த பணியாளர் ஒருவர் தனது நாக்கினை கத்தியால் அறுத்துக் கொண்டு இரத்தம் வடிய வடிய கோயிலுக்குள்ளே
ஓடித்திரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நயீனை நாகபூசணி அம்மன் கோயிலில் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்த பணியாளர் ஒருவர் நேற்றுக் காலை கோவிலுக்குள்ளே அங்கும் இங்குமாக ஓடித்திரிந்தார்.
இவரது செயற்பாடுகள் வித்தியாசமாக அமைந்திருந்தன. இவரைக் கட்டுப்படுத்த அங்கிருந்தவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை.
இந்நிலையில் முற்பகல் 10 மணியளவில் இந்நபர் கூரிய கத்தியொன்றினால் தனது நாக்கை இழுத்து தானே அறுத்துக் கொண்டார்.
இதன்பின்னரும் ஆலயத்துக்குள் ஒவர் ஓடித்திரிந்தார். நாக்கில் இருந்து வெளியேறிய இரத்தம் கோவிலில் பல இடங்களிலும் சிந்தியது.
பின்னர் ஒருவாறு இவரை மடக்கிபிடித்த சக பணியாளர்கள் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.
இவரது செயற்பாட்டின் காரணமாக கோயிலில் நடைபெறும் மதிய நேர பூஜை வழிபாடுகள் தாமதமாகின. தொடர்ந்து பிராயசித்த பூஜை வழிபாடுகள் அங்கு இடம்பெற்றன.
இவரின் இந்த விநோத செயலால் ஆலயத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. வழிபாட்டுக்கு சென்றிருந்த பக்தர்களும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.