அமெரிக்க கடற்கரையை கடந்த அக்டோபர் மாதம் சாண்டி என்ற பயங்கர புயல் தாக்கியது. அப்போது நியூஜெர்சியில் வசித்த உரேன் ராபர்ட் என்பவர், தனது வீட்டை காலி செய்துவிட்டு 13 கிலோ மீட்டர்
தூரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். அவர் தன்னுடன் தனது பூனைகுட்டியையும் கொண்டு சென்றார். ஆனால் அங்கு சென்ற சில நாட்களில் அந்த பூனை காணாமல் போய்விட்டது. சில மாதங்களுக்கு பிறகு ராபர்ட் தனது பழைய வீட்டுக்கு திரும்பினார். சம்பவம் நடந்த 6 மாதங்களுக்கு பிறகு கடந்த புதன்கிழமை அவரது வீட்டைத் தேடி அவரது செல்லப் பூனை வந்துவிட்டது. 13 கிலோ மீட்டர் பயணம் செய்து தனது எஜமானர் வீட்டை தேடிக் கண்டுபிடித்து வந்து சேர்ந்த அந்த பூனையை ராபர்ட் குடும்பத்தினர் கொஞ்சி மகிழ்ந்தனர்.

0 கருத்து:
கருத்துரையிடுக