புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


விண்வெளியில் பல்லாயிரக்கணக்கான விண்கற்களும், எரிகற்களும் பூமி போன்ற கிரகங்களை சுற்றிவருகின்றன. கற்பனைக்கு எட்டாத அளவிற்கு பெரியாத இருக்கும் விண்கற்கள்
பூமி மீது விழுந்தால், மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படும்.

இந்நிலையில், பூமிக்கு அச்சுறுத்தலாக இருக்ககூடிய விண்கற்களை கண்காணித்து, அவற்றால் பூமிக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை தடுக்கும் வண்ணம் ஒரு புதிய திட்டத்தை நாசா செயல்படுத்த திட்டம் தீட்டியுள்ளது.இதன்படி 'லாசோ' என்னும் ஒரு எரிகல்லுக்கு நாசா அதன் விண்கலத்தை அனுப்பவுள்ளது.

விண்கலத்தின் உதவியோடு லாசொவின் தன்மையை ஆராய்வதால் பூமிக்கு விண்கற்கள் மூலமாக ஏற்படும் தாக்கங்களை குறைக்க வாய்ப்புள்ளதாக நாசாவின் நிர்வாகி சார்லஸ் போல்டன் கூறியுள்ளார்.

இத்திட்டத்திற்காக விண்வெளி பாதுகாப்பு ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ள நாசா ஆய்வாளர்கள், தற்போது பூமியை நெருங்கும் விதத்தில் எந்த விண்கற்களும் இல்லை எனக் கண்டறிந்துள்ளனர்.

இறுதியாக சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியை தாக்கிய விண்கல்லால் டைனோசார் இனம் முற்றியுமாக அழிந்தது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top