புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மட்டக்களப்பு-செங்கலடி இரட்டை படுகொலை சந்தேக நபர்களான நான்கு மாணவர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளது.

பிரபல வர்த்தகரான சிவகுரு ரகு மற்றும் அவரது மனைவி விப்ரா ரகு ஆகியோர் கடந்த ஏப்ரல் 8ம் திகதி வீட்டில் சடலமாக மீட்கப்படடனர்.

இது தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது மகளின் காதல் விவகாரமே இதற்கு காரணம் என தெரியவந்தது. இதனையடுத்து கொல்லப்பட்டவர்களின் மகள் மற்றும் அவளின் காதலன் உட்பட நான்கு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இவர்கள் இன்று புதன்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிவான் ஜே.எம்.ஜே.றியாழ் முன்னிலையில் மீண்டும் இன்று ஆஜர் செய்யப்பட்டனர். இவர்களை எதிர்வரும் மே 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இவர்கள் அனைவரும் 15-16 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை மக்கள் கூடுவதற்கு முன்னதாக ஏழு மணிக்கே மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்திற்கு சந்தேக நபர்கள் கொண்டு வரப்பட்டனர்

மட்டக்களப்பில் இரட்டை கொலையின் சூத்திரதாரியின் லீலைகள்

மட்டக்களப்பில் பெற்றோரை கொலை செய்த மகள் விளக்கமறியலில்-புகைப்படங்கள்
மட்டக்களப்பில் கொலையுண்ட தகப்பனின் கண்களை தோண்ட சொன்ன மகள்
மட்டக்களப்பு தாயையும், தந்தையும் வெட்டிக் கொலை செய்வதற்கு ‘டோர்ச் லைட்’ பிடித்த மகள்

மட்டக்களப்பில் காதலுக்காக அரங்கேறிய இரட்டைக்கொலை குறித்த உண்மைகள்
மட்டக்களப்பில் காதலுக்காக பெற்றோரை கொலை செய்த மகள்-புகைப்படங்கள்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top