நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது மோசடி புகார்கள் குவிவதால் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்குவது குறித்து செயற் குழுவில் முடிவு செய்யப்படுகிறது. பவர் ஸ்டார் சீனிவாசன் ஏற்கனவே லத்திகா,
ஆனந்த் தொல்லை படங்களில் கதாநாயகனாக நடித்தார். அப்போது நடிகர் சங்கத்தல் தன்னை உறுப்பினராக பதிவு செய்து கொண்டார்.
பின்னர் நடிகர் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராகவும் பொறுப்பேற்றார். கடந்த வருடம் மோசடி புகார் ஒன்றில் பவர் ஸ்டார் கைதானதும் செயற்குழு உறுப்பினர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். தற்போது சங்கத்தில் சாதாரண உறுப்பினராக உள்ளார்.
கடந்த சில வாரங்களாக பவர் ஸ்டார் சீனிவாசன் மீது ஏராளமான மோசடி புகார்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குவிந்த வண்ணம் உள்ளன. கடன் வாங்கி தருவதாக கோடிக் கணக்கில் பணத்தை சுருட்டி விட்டதாக குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. பவர் ஸ்டாரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளார்கள். அவர் மீது குண்டர் சட்டம் பாயலாம் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.
இதையடுத்து நடிகர் சங்கத்தில் இருந்து பவர் ஸ்டார் சீனிவாசனை நீக்க வேண்டும் என்று நடிகர்கள் மத்தியில் வற்புறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் வருகிற 30-ந் தேதி நடக்கிறது. இக்கூட்டத்தில் பவர் ஸ்டார் சீனிவாசனை சங்கத்தில் இருந்து நீக்க நடிகர்கள் வற்புறுத்த முடிவு செய்துள்ளனர். செயற்குழு அவரை நீக்குவது குறித்து ஆலோசித்து முடிவு செய்யும் என மூத்த நடிகர் ஒருவர் கூறினார்.
0 கருத்து:
கருத்துரையிடுக