புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


புகழின் உச்சியில் இருக்கும் போதே ரிட்டையர்ட் ஆகி, புகழை தக்க வைத்துக் கொள்ள யாருக்கும் விருப்பம் வருவதில்லை. சச்சின் மாதிரி சர்ச்சைக்கு இடையிலும் ஆடிக் கொண்டிருப்பார்கள். குஷ்புக்கு
இல்லாத பேரா புகழா.. அரசியல் ஆன்மீகம் என்று ஒதுங்காமல் வில்லு படத்தில் ஒரேயொரு பாடலுக்கு ஆடினார்.

ஹை பிட்சில் வில்லு.. வில்லு என்று பெண் குரல் வீறிட, குஷ்பு தனது எக்ஸ்ட்ரா லார்ஜ் உடம்புடன் குதித்து ஆட, கண் பிதுங்கிவிடும். அந்த அதிபயங்கர நடனத்துடன் தனது நடன ஆசையை அவர் முடித்துக் கொண்டிருப்பார் என்று பார்த்தால்... மீண்டும் ஒரு படத்தில் ஆடப் போகிறாராம். இது தனது காதல் கணவர் சுந்தர் சி.க்காக.

சந்தர் சி. இயக்கியிருக்கும் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தின் இறுதியில் ஒரு பாடல் காட்சியை வைத்திருக்கிறார்கள். அதில் குஷ்பு ஆடப் போகிறாராம். ஒரேயொரு ஆறுதல் செய்தி, குஷ்பு மட்டுமின்றி வேறுசில முன்னணி நட்சத்திரங்களும் இதில் ஆட இருப்பதுதான்.

குஷ்பு இனி நடனம் ஆடாமலிருந்தால் மீண்டுமொருமுறை கோயில் கட்டலாம் என்றிருக்கிறோம். கரசேவைக்கு சாதி, மத, இன பேதமில்லை.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top