சூப்பர் ஸ்டார் ரஜினி பாராட்டிய மகிழ்ச்சியில் இருக்கிறார் இனியா. வாகை சூடவா மூலம் பிரபலமான இவருக்கு சென்னையில் ஒரு நாள் படம் இரண்டாவது ரவுண்டுக்கு அடித்தளம் போட்டுள்ளது. இப்படத்தில் கணவனுக்கு துரோகம்
செய்யும் பெண் கேரக்டரில் நடித்தார். படம் வெற்றிகரமாக ஓடி இனியாவுக்கு பெயர் வாங்கி கொடுத்துள்ளது. இது குறித்து இனியா கூறியதாவது:-
சென்னையில் ஒரு நாள் படத்துக்கு நல்ல விமர்சனங்கள் வந்துள்ளன. நிறைய பேர் பாராட்டினார்கள். படம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. ரஜினிகாந்த் இந்த படத்தை பார்த்து கைதட்டி பாராட்டினார். எனது நடிப்பும் நன்றாக இருந்ததாக சொன்னார். ரஜினி பாராட்டியது விருது வாங்கியது போல் மிகவும் சந்தோஷமாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.திரை விமர்சனம்-சென்னையில் ஒருநாள்
இனியா தற்போது மூன்று மலையாள படங்களில் நடித்து வருகிறார். தமிழில் மாசானி”, புலிவால் ஆகிய படங்களில் நடிக்கிறார். 'ரெண்டாவது படம்' என்ற படத்தில் கவுரவ தோற்றத்தில் தோன்றுகிறார்.
0 கருத்து:
கருத்துரையிடுக