புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

நைஜீரியாவில் ஓரினச்சேர்க்கை திருமணத்தை ஒரு குற்றச்செயல் என்ற சர்ச்சைக்குரிய சட்ட மூலத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அங்கு இனிமேல் ஓரினச்சேர்க்கை திருமணம் புரிபவர்களுக்கு 14 வருட சிறைத் தண்டனை கிடைக்கும். நாடாளுமன்றத்தின் செனட் சபை 18 மாதங்களுக்கு முன்னரே இந்த சட்டமூலத்தை அங்கீகரித்துவிட்டது. தற்பொழுது பிரதிநிதிகள் சபையும் அதனை நிறைவேற்றிவிட்டது.

நைஜீரியாவில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான சங்கங்களையும், கேளிக்கை விடுதிகளையும் நடத்துவதும் இனிமேல் சட்ட விரோதமாகிவிடும். அதுபோன்று, ஒருபால் உறவுக்காரர்களின் படங்களை பொது இடங்களில் காட்சிப்படுத்துவதையும் இந்த சட்டம் தடை செய்கிறது.

இதேவேளை, இவ்வாறான சட்டங்கள் நைஜீரியாவில் எச்ஐவி- எயிட்ஸ் தொடர்பான வேலைத்திட்டங்களுக்கு கிடைக்கும் வெளிநாட்டு நிதியுதவிகளை கடுமையாகப் பாதிக்கும் என்று விமர்சகர்கள் ஏற்கனவே கண்டித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top