யாழ்.கொழும்பு தனியார் பஸ் நிலையத்திற்கு வரும் பெண்களுடன் மதுபோதையில் நிற்பவர்கள் சேட்டை விடுவதாக பயணிகள் தரப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியிலுள்ள தனியார் பஸ் நிலையத்தில் இரவு நேரங்களில் மதுபோதையில் பெண்களுடன் சேட்டையில் ஈடுபடுவோரினால் பெண்கள் தனிமையில் பஸ் நிலையத்திற்கு வர முடியாத ஒரு அச்ச சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இந்தப் பகுதியில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவில்லை எனவும் மதுபோதையில் திரிபவர்கள் பெண்களிடம் அங்க சேட்டை விடுவதாகவும் அவர்களின் கைகளைப் பற்றி இழுப்பதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு செல்வதற்காக பஸ்சுக்காக காத்து நிற்கும் பெண்களுடன் தீய நோக்கத்துடன் சிலர் பேச்சுக் கொடுப்பதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இந்த யாழ்.கொட்டடி தனியார் பஸ் நிலையத்தில் நிரந்தர பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட வேண்டும். அப்போது தான் குடிகாரர்களின் அட்டகாசங்களை தடுக்க முடியும் பிரயாணிகள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்து:
கருத்துரையிடுக