அமெரிக்காவைச் சேர்ந்த நபரொருவர் அழுதுகொண்டிருந்த தனது 6 வார குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்காக குளிரூட்டியில் வைத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
டைலர் ஜேம்ஸ் டொட்ச் என்ற 25 வயதான நபரே மேற்படி கைதானவராவார்.
தாய் வீட்டில் இல்லாத போது குழந்தை அழுதுகொண்டிருக்க அக்குழந்தை 10 டிகிரி அளவான குளிரூட்டியில் தூக்கி வைத்துள்ளார் டைலர். இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, குழந்தையை குளிரூட்டியில் வைத்து ஒரு மணி நேரம் கழித்து தாய் வீட்டுக்கு வந்து குழந்தை மீட்டுள்ளார். பின்னர் அவசர பொலிஸாருடன் தொடர்பு கொள்ள முயற்சித்த போது அதனை தடுத்துள்ளார் குறித்த சந்தேக நபர்.
இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் பொலிஸாரை தொடர்பு கொண்டு டைலரை பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
இது குறித்து டைலர் விசாரணையின் போது கூறுகையில், வேலை வீட்டு சோர்வாக வீட்டுக்கு வந்தபோது குழந்தை அழவே தூக்கி குளிரூட்டியில் வைத்தேன். பின்னர் நான் சோர்வில் உறங்கிவிட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது டைலர் பிணையில் விடுதலையாக முயற்சித்து வருகிறார். பிணை கிடைக்கும் பட்சத்தில் டைலர் தனது குழந்தையையும் மனைவியையும் பார்ப்பதற்கு தடை விதிக்கப்படும் எனக் கூறுப்படுகின்றது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்து:
கருத்துரையிடுக